Thursday 21 July 2011

சித்தர்களும் தவமும்

சித்தர்களின் வாழ்கை வரலாற்றை தெரிந்துகொள்வதில் சிறுவயதில் இருந்தே எனக்கு ஆர்வம் உண்டு .எனவே இப்போது சித்தர்களை பற்றி ஆராய முற்பட்டிருக்கிறேன் . இவர்களை போல் நாமும் வாழ்ந்து விடலாம் என அடிகடி நினைத்ததுண்டு . ஆனால் இவர்களோடு பேசிய பிறகு தான் தெரிந்தது ...இது சுலபம் அல்ல என்று .....!!!
                                      
                      இவர்களை போல் வாழ நினைப்பது சுலபம்
                      இவர்களை போல் வாழ்வது கடினம்..,
                                                                                             -தவம்
 
நான் தெரிந்து கொண்டது: " பத்து குளத்தில் குளிக்கணும்
                                                     பதினோரு வீட்டில் பிட்சை எடுத்து சாபிடனும்
                                                     வீதியில் துங்கனும்"   .....என்னால் முடிமுமா ...?? என்ற கேள்வி என் இதயத்தில் பயத்தை உண்டாகியது .
 
 

முதலில் பித்தனாக வேண்டும்.
பிறகுதான் சித்தனாக முடியும் ....,
                        - தவம்
 
மனிதர்கள் அனைவருக்கும் வரலாறு எழுதப்பட்டு விட்டது.
மனிதனின் எதிர்கால வரலாறை தெரிந்தவன் மட்டுமே சித்தன்...,
                                           -தவம்